நைஜீரியா நாட்டின் மாய்துகுரி நகரில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் படைவீரர்கள் உள்ளிட்ட 15 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் பொது மக்களை இலக்கு வதை்து பல்வேறு தாக்குதலை மேற்கொண்டு வருகின்ற இந்நிலையில், நைஜீரியா நாட்டின் மாய்துகுரி நகரில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் சிலர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.
இதன் காரணமாக நைஜீரியானின் படைவீரர்கள் உட்பட 15 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.