தொடரும் நெருக்கடி! இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

123

புகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாக இலங்கையில் பெருந்திரளான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையை தீர்ப்பதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில் இ.போ.ச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 500 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை இராணுவத்தினரின் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், வீதி அனுமதிப் பத்திரத்தை கருத்தில் கொள்ளாது எந்தவொரு பேருந்தும் எந்த பகுதிகளிலும் சேவையில் ஈடுபடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் போக்குவரத்து தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் 011 7555555 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என இ.போ.சவின் தலைவர் ரமல் சிறிவர்தன மக்களுக்கு அறிவித்துள்ளார்.

மேலும் புகையிரத பருவகால சீட்டை வைத்துள்ள பயணிகள் இ.போ.சவிற்கு சொந்தமான பேருந்துகளில் இலவசமாக பயணிக்கக் கூடிய வசதியும் பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE