கோர விபத்திற்கு இலக்கான கொழும்பிலிருந்து சென்ற பேருந்து: ஒருவர் பலி, நான்கு பேர் படுகாயம்

136

கொழும்பிலிருந்து சென்ற தனியார் பேருந்தொன்று கங்கையொன்றுக்குள் விழுந்ததால் ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், நான்கு பேர் படுகாயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை ஹம்பலாந்தோட்டை – நோனாகம பிரதேசத்தில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் கதிர்காமத்தை சேர்ந்த 32 வயது நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கதிர்காமம் நோக்கி சென்ற இந்த பேருந்து பல மின் கம்பங்களுடன் மோதி இறுதியில் நொதகம கங்கையில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் தப்பியோடியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகளை ஹூங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

SHARE