ஞானசாரருக்கு கிடைத்த கடூழியச் சிறை விக்னேஸ்வரனுக்கும் கிடைக்குமா?

54

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கிடைத்த கடூழிய சிறைத்தண்டனை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் வழங்கப்படுமா என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 ஆண்டுகளில் அனுபவிக்கும் படி 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தினம் தினம் நீதிமன்றத்தை அவமதித்து அபகீர்த்தியை ஏற்படுத்திவரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தண்டனை வழங்கப்படுமா?

மேலும், நாளுக்கு நாள் அரசியல் அமைப்பை மீறி தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு வரும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தண்டனை வழங்கப்படுமா? என்று தாம் எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் கூறிப்பிட்டுள்ளார்.

SHARE