இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! கிடைக்கவுள்ள நன்மை

107

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவலை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டவர்கள் இலங்கையில் பெற்றுக் கொள்ளும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அறிவிடப்படும் வட் வரியை மீண்டும் அவர்களிடமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2018 வரவு செலவுத் திட்டத்திற்கமைய செயற்படுத்தப்பட்ட இந்த வேலைத்திட்டம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமுலாகவுள்ளது.

இந்த செயற்றிட்டம் அடுத்த மாதத்தில் அமுலுக்கு வரும் என அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வட் வரி திருத்த விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

அதற்கமைய இலங்கை வரும் சுற்றுலா பயணிகளிடம் அறவிடப்படும் 15 வீத வட் வரியை அவர்கள் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வட் வரியை மீட்கும் முறை ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாம் இங்கு பெற்றுக் கொள்ளும் பொருட்களுக்காக அறவிடப்படும் 15 வீத வட் வரியை மீண்டும் விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

2008ஆம் ஆண்டு வரையில் சுற்றுலா பயணிகளின் வருகை 2.1 மில்லியன் வரை அதிகரித்துள்ளமையினால் 4000 மில்லியன் அமெரிக்க டொலர் வரை வருமானம் கிடைத்துள்ளது.

இந்த நிலையை மேலும் அதிகரித்து 2020ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 4 மில்லியன் வரை அதிகரிப்பதற்கு சுற்றுலா அமைச்சினால் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்மூலம் இலங்கைக்கு 7000 மில்லியன் வருமானம் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE