தாய்க்கு எமனாக மாறிய மகளின் காதலன்! கொழும்பில் நடந்த கோர சம்பவம்

97

கொழும்பின் புறநகர் பகுதியான கொட்டாவை பிரதேசத்தில் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3.30 முதல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டாவை, சுஹத பிளேஸ், சிறிமல்வத்தை பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த 55 வயதான ஸ்ரீயானி கொடிக்கார என்ற பெண்ணே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகளது காதலன், இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொலையை செய்த சந்தேகநபர் காதலியையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதில் காயமடைந்த அந்த பெண் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. கொலை செய்த சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கொட்டாவை பொலிஸார் கூறியுள்ளனர்.

SHARE