சளியை அடியோடு விரட்டும் அற்புத பானம்! இதை ட்ரை பண்ணுங்க

சிலருக்கு காலநிலை மாற்றத்தால் அடிக்கடி சளிப்பிடிப்துண்டு.

இதற்கு ஆங்கில மருத்துவத்தை நாடிச் செல்லமால் நாம் முன்னோர் காலங் காலமாக கையாண்டு வந்த இயற்கை மருத்துவத்தை நாடி நாமும் பயன் பெறலாம்.

தேவையான பொருட்கள்:
  • சுக்கு – 1/2 கப்,
  • மல்லி – 1/4 கப்,
  • மிளகு – 1/2 டீஸ்பூன்,
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • தண்ணீர் – 2 கப்,
  • சுக்கு காபி பொடி – 2 டீஸ்பூன்,
  • பனங்கற்கண்டு – தேவையான அளவு.
செய்முறை:

முதலில் சுக்கு மல்லி பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி விடவும்.

பின் நன்றாக குளிர வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து தண்ணீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 டீஸ்பூன் சுக்கு பொடியை சேர்த்து கொள்ளவும்.

பின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

அதில் உள்ள கற்கண்டு கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டினால், சுக்கு மல்லி தேனீர் தயார். பனங்கற்கண்டுக்கு பதிலாக தேன் அல்லது கருப்பட்டியும் சேர்த்து அருந்திக் கொள்ளலாம்.

இந்த பானத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை குடித்துவந்தால் வயிற்றுக்கோளாறுகள் வராமல் இருக்கும் என்பதோடு முதுமையை தள்ளிப்போடலாம்.

About Thinappuyal News