பரபரப்பாக செயற்பட்ட கோட்டை ரயில் நிலையத்தின் பரிதாப நிலை! காத்துக் கிடக்கும் வெளிநாட்டவர்கள்

122

நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ரயில்வே தொழில் சங்க நடவடிக்கை காரணமாக, அனைத்து ரயில் நிலையங்களும் வெறிச்சோடிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவித முன்னறிவித்தலும் இன்றி, திடீரென ஆரம்பிக்கப்பட்ட ரயில்வே தொழில் சங்க நடவடிக்கையால், புறக்கோட்டை ரயில் நிலையம் பாழடைந்த நிலையமாக மாறியுள்ளது.

நாளாந்தம் இலட்சணக்கான பயணிகள் பயணிக்கும் கோட்டை ரயில் நிலையத்தில், ஒரு நபரேனும் இல்லை என தெரியவருகிறது.

ரயில் நிலையத்திற்குள் நுழையும் கதவு உட்பட மூடப்பட்டுள்ளன.

நீண்ட தூரம் செல்ல வந்த வெளிநாட்டவர்கள் சிலர் ரயில் நிலையத்திற்கு வெளியே நிற்பதாக கூறப்படுகின்றது.

நேற்று முன்தினம் கோட்டை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் ஒரு மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

SHARE