தமிழக மீனவர்கள் 27 பேர் கைது ; நாட்டுபடகுகள் பறிமுதல்

16

நேற்று மாலை நெடுந்தீவுக்கு தென் கிழக்கே இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்பரப்பில்  அத்துமீறி நுழைந்து மீன் பிடியில்  ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின்  இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 27 மீனவர்களை கைது செய்த கடற்படையினர் நான்கு  நாட்டுபடகை பறிமுதல் செய்து  காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விசாரணையில் வெளிநாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்படும் கூறல்மீன்கள் அதிகளவில் இந்த பகுதி இருந்ததால் அதனை பிடித்து கொண்டிருந்த போது காற்றின் வேகம் காரணமாக எல்லைதாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரனைக்கு பின்னர் இன்று காலை மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்ககபடவுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE