விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் – குவியும் பாராட்டு

103

நடிகை கீர்த்தி சுரேஷ் பல்வேறு படங்களில் நடித்துவருகிறார். சர்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் அவர் தான் ஹீரோயின்.

விஷால் ஹீரோவாக நடிக்கும் சண்டக்கோழி 2 படத்தில் தான் படிக்கவேண்டிய பகுதிகளை நடித்து முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

எப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி , செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார்.

வழக்கமாக நடிகர் விஜய் தான் இப்படி ஷூட்டிங் முடிந்தபிறகு அல்லது ரிலீஸ் ஆன பிறகு படக்குழுவுக்கு தங்கம் கொடுப்பார். அது போலவே கீர்த்தி செய்திருப்பதற்கு பாராட்டு குவிந்துவருகிறது.

SHARE