சொந்த மண்ணில் அதிக விக்கெட்: முரளிதரனுக்கு அடுத்த இடத்தை பிடித்த ஆண்டர்சன்

120

டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2ஆம் நாள் ஆட்டத்தில் ஆண்டர்சனின் அபார பந்துவீச்சில் இந்திய அணி 107 ஓட்டங்களில் சுருண்டது.

இந்த இன்னிங்ஸில் ஆண்டர்சன் 20 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னதாக அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது, சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பந்துவீச்சாளர் எனும் சாதனையை படைத்துள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 140 டெஸ்ட் போட்டிகளில் 549 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சொந்த மண்ணில் 353 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதலிடத்தில் 493 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் முத்தையா முரளிதரன் உள்ளார்.

3வது இடத்தில் அனில் கும்ப்ளே(350 விக்கெட்டுகள்), 4வது இடத்தில் ஷேன் வார்னே(319 விக்கெட்டுகள்) ஆகியோர் உள்ளனர்.

SHARE