சமூக ஊடகம் என்றால் என்ன?

400

3.1 ஊடக வகைகள்

தற்காலத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருக்கும் பொதுவான ஊடகங்கள் பின்வருவன ஆகும்.

• அச்சு ஊடகங்கள்

(1) நாளிதழ்கள்
(2) வார, மாத இதழ்கள்

• மின்னணு ஊடகங்கள்

(1) வானொலி
(2) தொலைக்காட்சி
(3) திரைப்படம்

social-platforms

இவை தளங்கள்தானா?

பதின்மர்களின் வாதங்கள் அல்லது கிசுகிசுக்கள் போன்ற சமூக ஊடகங்களின் உள்ளடக்கங்கள் தளங்களுக்கு நடுவே, அதாவது பிபிஎம் இல் இருந்து பேஸ்புக் மூலம் ட்விட்டர் அல்லது ஆர்குட்டிலிருந்து ஃபேஸ்புக், மிகவும் எளிதாக பரவுகின்றன. ஒரே தளத்தை முற்றிலும் வேறு வகையான உள்ளடக்கங்களுக்கும் பயன்படுத்தலாம். ஆகையால் தளங்கள் என்பது உள்ளடக்கங்கள் வெளியிடப்படும் இடங்கள், ஆனால் அவைகள் என்ன, ஏன் வெளியிடப்படுகின்றன என்பதை விவரிப்பதில் மிகவும் சிறிய பங்கே வகிக்கின்றன.

நம்மால் சமூக ஊடகத்தை வரையறுக்க முடியுமா?

சமூக ஊடகம் என்றால் என்ன என்ற வரையறையை எங்களது ஒரு ஆய்வு திட்டமான ‘அளவிடக்கூடிய சமுதாயக் குணங்கள்’ இல் கொடுத்துள்ளோம், பல்வேறு சாத்தியமான‌ வரையறைகளில் இது ஒன்றேயாகும். மானுடவியலாளர்கள், சமுதாயக் குணங்களில் ஆர்வமாக உள்ளனர். அதாவது சமூகத்தில் மக்கள் எவ்வாறு இணைந்திருக்கிறார்கள் என்பதில். முன்பு ஊடகங்கள் தனியார் வசப்பட்டதாகவோ அல்லது முழுவதும் பொதுத்துறையுடையதாகவோ இருந்தன‌ என மானுடவியலாளரான‌ நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.  ஆனால் சமூக ஊடகங்களின் தளங்கள் இரண்டுக்கும் இடையே உள்ள இடத்தை ஆக்கிரமிக்கின்றன.. பிற சம்பந்தமுடைய மற்ற துறைகளுக்கு வேறு வரையறைகள் உண்டு.

சமூக ஊடகம் என்பது என்ன என்று முடிவு செய்வது நாங்கள் அல்ல, இறுதியில் நீங்கள் தான்

நாம் ‘சமூக ஊடகம்’ என்ற பதத்தை தேர்வு செய்ய வில்லை, அல்லது அதற்கு முன் ‘சமூக வலைப்பின்னல் தளங்கள்’ என்பதை. ஆனால் நாம் ஆராயும் மனிதர்களின் விதிகள் மற்றும் நடத்தையை மானுடவியல் பின்பற்றுகிறது. சமூக ஊடகங்களின் பரிணாம மாற்றத்தைப் பொறுத்து எங்கள் விதிமுறைகளும், அணுகுமுறைகளும் தொடர்ந்து மாறும், மேலும் வெவ்வேறு சமூகங்களின் வேறுபட்ட பயன்பாட்டு முறைகளையும் பிரதிபலிக்கும்.

SOCIAL MEDIA என்றால் என்ன? ஒரு அடிப்படை அறிமுகம்

What is Social Media என்றால் என்ன

இன்றைக்கு Social Media பற்றிய சில அடிப்படை செய்திகளை தெரிந்துக் கொள்ள போகிறோம்.

SOCIAL MEDIA என்றால் என்ன?

Social Media (சமூக ஊடகம்) என்றால் என்ன என்பது குறித்து பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், அதை சுருக்கமாகவும் எளிமையாகவும் சொல்ல வேண்டும் என்றால்: “உங்கள் கருத்துக்களை படைக்கவும், பகிரவும் Internet மூலம் இணைக்கப்பட்ட ஒரு தளம், அல்லது ‘மேடை’ என்று கூட சொல்லலாம்.”

SOCIAL MEDIAவுக்கும் TRADITIONAL MEDIAவுக்கும் என்ன வித்தியாசம்?

இன்றைய நவீன சமூக ஊடகத்திற்கும், வழக்கமான மரபார்ந்த ஊடகங்களான ரேடியோ, தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற ஊடகங்களுக்கான வித்தியாசம் என்னவென்று பார்ப்போம்.

1.USER GENERATED CONTENT – ஒரு சதாரண மனிதனின் செய்தி

பொதுவாக அச்சு ஊடகங்கலானாலும் (Print media – Newspapers), காட்சி ஊடகங்கலானாலும் (Audio-visual media – TV, Radio) சரி, செய்தியை உருவாக்குவது ஒரு நிறுவனமாகவும், அதை பார்ப்பவர், அல்லது படிப்பவர் ஒரு தனி நபராகவும் இருப்பார். அந்த நிறுவனம் என்ன சொல்ல நினைக்கின்றதோ அதைத்தான் நுகர்வோர் அனைவரும் உட்கொள்ள முடியும்.
ஆனால் Social Media எனப்படும் சமூக ஊடகத்தில், பெரும்பாலான் செய்தியை உருவாக்குவதும், பகிருவதும் தனிமனிதராகிய நுகர்வோரே (users)!
அதனாலேயே இது பரவலாக எல்லோராலும் விரும்பப்படுகிற ஒரு ஊடகமாக தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. ஒரு சாமானியனின் குரலை பொதுவெளியில் உரக்கச் சொல்கிற சாதனமாக இருப்பதால், ஒரு தனிமனிதன் தன்னை இந்த சமூகத்தின் அங்கமாக உணருகிறான்.

2. VIRAL CAPABILITY – காட்டுத்தீயாய் செய்திகளை பரப்பும் சாத்தியம்

இரண்டாவது, வேகமாக பரவும் தன்மை (viral capability) இந்த நவீன சமூக ஊடகங்களுக்கு உண்டு. மற்ற mediaக்களைக் காட்டிலும் social mediaவில் ஒரு செய்தி அல்லது படைப்பு, லட்சக்கணக்கானோரை உடனடியாக சென்று அடைந்து விடுகிறது. ஆகவே உங்களுக்கு செய்திகளை பரப்ப ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதுமானது.

3. LOW COST PROMOTIONAL CAPABILITY – குறைந்த செலவில் செய்திகளை பரப்பும் சாத்தியம்

மூன்றாவதாக உங்கள் படைப்புக்களை மற்றவர்களிடம் எடுத்து செல்வதற்கு மற்ற எந்த பழைய ஊடகங்களைக் காட்டிலும் இதில் ஆகும் செலவு மிக மிக குறைவு. காட்சி ஊடகங்கள் மற்றும் பண்பலைகள் மூலமாக உங்கள் படைப்பை எடுத்து செல்வதற்கு பல லட்சங்களை செலவழிப்பதற்கு பதிலாக மிக குறைந்த முதலீட்டில் (சில நூறு ரூபாய்களில்) அனைவரையும் சென்று அடைந்து விட எளிமையான வழி இந்த சமூக ஊடகங்கள்.

சமூக ஊடகத்தை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்?

சமூக ஊடகங்கள் தனிமனித ஊடகமாக மாறிக்கொண்டிருக்கின்ற வேளையில், அதை பயன்படுத்தி பயனடைவது என்பது மிக அத்தியாவசிய தேவையாக மாறிக்கொண்டு இருக்கிறது. உங்களிடம் பிறருக்கு பயன்ப்படும்படிக்கு உபயோகமான ஒரு தகவலோ செய்தியோ இருக்கிறது என்றால் அதை உலகிற்கு சொல்ல சமூக ஊடகங்களை விட சிறந்த வழி இருக்க முடியாது .
Facebook எனப்படும் முகநூளில் மட்டும் நூற்று தொண்ணூற்று நான்கு கோடி பேர் பயனாளிகளாக இருப்பதாக இந்த முகநூல் நிறுவனம் தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் பிற சமூக ஊடக நிறுவனங்களான Twitter, Instagram, LinkedIn, Google Plus எனும் பிற நிறுவனங்கள் வழியாகவும் கோடான கோடி பேர் அன்றாடம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மிக எளிமையாகவும், செலவில்லாமலும் கிடைக்கும் ஒரு மேடையை நீங்களும் ஏன் பயன்படுத்தக்கூடாது?

உதாரணத்திற்கு 18 – 25 வரையுள்ள, அதுவும் திருச்சியில் உள்ள இளைஞர்களுக்கான ஒரு செய்தியை, ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அவர்கள் மட்டும் பார்க்கும் படியாக செய்ய வேண்டுமென்றால், அது இந்த நவீன சமூக ஊடகங்களில் மட்டுமே சாத்தியம்.

இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளரோடு தினந்தோரும் பேசலாம். உங்கள் எண்ணத்தை வெளியிட வீடியோ, ப்ளாக் (Blog) எழுதுவது, அனிமேஷன் போன்ற எண்ணற்ற வகைகளில் வெளிப்படுத்தலாம்.

நீங்கள் ஒரு தொழில் செய்பவராக இருந்தால், உங்கள் பிராண்டை (Brand) உருவாக்கவும், விளம்பரப்படுத்தவும் (Advertising), இந்த சமூக ஊடகங்கள் பெரிய அளவில் பலன் கொடுக்கும்.

தொழில் ரீதியிலான கருத்துக்களை வெளிப்படுத்த மட்டும் அல்ல, தனிமனிதனாக உங்கள் கருத்துக்களை எண்ணங்களை வெளிப்படுத்தவும் இது மிகச் சிறந்த ஊடகம்.

உங்களோடு, ஒத்த கருத்துடையவர்களோடு உரையாடுவதற்கும், உங்கள் கருத்துக்களை கூர்மைபடுத்திக் கொள்வதற்கும், உலகளாவிய அளவில் உங்கள் கருத்துக்களை கொண்டு செல்வதற்குமான மிகச் சிறந்த ஊடகம், இன்றைய நவீன சமூக ஊடகங்கள் தாம்.

அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று வருகிற காலங்களில் கூற இருக்கிறேன். நீங்களும் உங்களுக்கு பயன்படுகிற வகையில் சமூக ஊடகங்களில் கால்பதிப்பதை பற்றி சிந்தியுங்கள்.

உங்களுக்கு இதைப்பற்றி மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் இந்த commentsல் அதை கேட்கலாம். அல்லது Facebook மூலமாகவும் Facebook Messenger வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.

பொதுவாக ஊடகம் என்றால் கடத்துவது, காவுவது என்று தமிழில் அர்த்தம் கொள்ளப்படுகிறது.
ஒரு செப்புக்கம்பி ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு மின்சாரத்தை கடத்திச் செல்லும் போது அது அங்கே ஒரு ஊடகமாகச் செயற்படுகிறது.அதே போல ஒருவர் பேசும்பேச்சை,மற்றவர் கேட்பதற்கு அதை ஒலி அலைகளாகச் சுமந்து செல்லும் காற்று ஊடகமாகச் செயற்படுகிறது.
ஊடகவியல் என்கிறபோது அது மனிதர்களுக்கிடையில் கருத்துக்களை –தகவல்களை காவிச் செல்கின்ற -பரப்புகின்ற வேலையைச் செய்கின்ற தொடர்பாடல் சம்மந்தப்பட்ட துறையைக் குறிக்கிறது என்று சாதாரணமாகச் சொல்லலாம்.

குறிப்பாகச் சொல்வதானால் கருத்தியலை கட்டமைப்பது,மனிதர்களினதும் சமுகத்தினதும் இருப்பை தீர்மானிப்பது, சந்தைப் பொருளாதாரத்தின் இருப்பை தீர்மானிப்பது, அரசியல் தத்துவம் விஞ்ஞானம் சட்டம் மருத்துவம் பொறியியல் என்று பல்துறை சார்ந்த விடயங்களில் தீர்மானகரமான சக்தியாக விளங்குவது என்று ஊடகவியலில் சர்வ வியாபகத் தன்மையை விளக்கலாம்.

நாம் ஏன் போஸ்ட் செய்கிறோம்?

நம் காலத்தின் முக்கியமான இந்தக் கேள்விக்கு விடை அளிப்பதற்காக ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சமூக ஊடகப் பயன்பாடு பற்றிய புதிய புரிதல்களை முன்வைக்கும் இந்த ஆய்வு முடிவுகள் பற்றி அறிந்துகொள்வதோடு இது தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள ஆன்லைன் பாடத்திட்டத்திலும் நீங்கள் சேர்ந்து பயிலலாம்.

இந்த ஆய்வும் சரி, அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஆன்லைன் பயிற்சி வகுப்புகளும் சரி, நாம் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் விதம் தொடர்பாக நமது புரிதலை மேலும் விசாலமாக்கக்கூடியது!

தகவல் தொடர்புக்கும் சரி, நட்பு வட்ட உரையாடலுக்கும் சரி சமூக ஊடகங்களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் விதம் பற்றி நாம் எந்த அளவுக்கு அறிந்திருக்கிறோம் என்பது சந்தேகம்தான்!

மானுடவியல் நோக்கிலும் இந்தக் கேள்வி முக்கியம் பெறுவதால் 9 மானிடவியல் ஆய்வாளர்கள் களத்தில் இறங்கி இதற்குப் பதில் காண முடிவுசெய்தனர். இந்தியா, பிரேசில், சிலி, சீனா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட 15 நாடுகளில் 15 மாதங்கள் செலவிட்டு இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரி மற்றும் ஐரோப்பிய ஆய்வுக் குழு இரண்டும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் இந்தியா தொடர்பான ஆய்வை மானுட‌வியல் வல்லுந‌ர் ராம் வெங்கட்ராமன் மேற்கொண்டார்.

பொதுவாக சமூக ஊடகப் பயன்பாட்டினால் தனிநபர்கள் சுய நாட்டம் கொண்டவர்களாகவும், சுயவிரும்பிகளாகவும் மாறியிருப்பதாகக் கருதப்படும் நிலையில், இந்த ஆய்வு பெரும்பாலும் பாரம்பரியக் குழு, குடும்பம், இன உணர்வுகள் சமூக ஊடகப் பயன்பாட்டிலும் பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கிறது. உதாரணமாக பிரேசிலில் நேருக்கு நேர் சந்தித்துப் பேசிக்கொள்ளும் வாய்ப்பில்லாத குழுக்களைச் சேர்ந்த பலர் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. கிராமப்புற சீனாவில் பயனாளிகள் தங்கள் கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளைக்கூடப் பகிர்ந்துகொள்ளும் நிலை இருக்கிறது.

இதே போல சமூக ஊடகங்கள் கல்வியில் இருந்து திசை திருப்பும் கவனச் சிதற‌லாக இல்லாமல் கல்விக்கு உதவும் சாதனங்களாக இருக்கின்றன என்பதும் மற்றொரு முக்கியக் கண்டுபிடிப்பாக அமைகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை வசதி படைத்த பள்ளிகள் சமூக ஊடகத்தைக் கவனச் சிதறலாகக் கருதும் நிலையில், ஏழை எளியவர்கள் படிக்கும் பள்ளிகளில் சமூக ஊடகங்கள் கற்றலுக்கு உதவும் முக்கியச் சாதனமாகக் கருதப்படுகிறது. ஃபேஸ்புக் மூலம் குழுக்கள் அமைத்து ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராக உதவும் கிராமப்புறக் குழுக்கள் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் செல்ஃபி பற்றித் தெரியவந்துள்ள விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. ஏனெனில் உலகம் முழுவதும் பலவிதமாக செல்ஃபி எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருப்பதையும், நாட்டுக்கு நாடு இது மாறுபடுவதையும் ஆய்வு உணர்த்துகிறது. செல்ஃபி என்பது சுயநலம் சார்ந்த‌து அல்ல என்றும் தெரியவந்துள்ளது.

சமூக ஊடகம் என்பது சமூக ஊடகத் தளங்கள் அல்ல. மாறாக அவற்றைப் பயன்படுத்தும் மக்களும், அவர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்களும்தான் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை கடவுள் படத்தை வெளியிடுவதில் தொட‌ங்கி மதம் தொடர்பான உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளச் சமூக ஊடகம் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. பலரும் ஊக்கம் தரும் செய்திகள் மற்றும் வாசகங்களைத் தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்துகொள்கின்றனர். பிரேசிலில் ஆதிக்கம் செலுத்திய ‘ஆர்குட்’ சேவை பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

வர்த்தகம், அரசியல் போன்ற துறைகளில் சமூக ஊடகத்தின் தாக்கம் பற்றியும் விரிவான தகவல்களை இந்த ஆய்வு தெரிவிக்கிறது. சமூக ஊடகம் பாலின வேறுபாட்டின் மீது தாக்கம் செலுத்துகிறது, இணையத்தில் நிலவும் சமத்துவம் நிஜ உலகில் பிரதிபலிப்பதில்லை என்பன போன்ற தகவல்களும் தெரியவந்துள்ளன. முக்கியமாக, சமூக ஊடகம் என்பது வெறும் தகவல் தொடர்புக்கானது மட்டும் அல்ல; அது வாழ்க்கையில் ஓர் அங்கம் என்றே பெரும்பாலானோர் கருதுகின்றனர். மீம்கள் இணைய உலகில் கலாச்சாரக் காவலர்களாக உருமாறி இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

சமூக ஊடகம் சில நேரங்களில் தனியுரிமையை அதிகரிக்கவும் உதவலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வை மேற்கொண்ட லண்டன் கல்லூரி மானுடவியல் தலைவரான டேனியல் மில்லர் உலகம் முழுவதும் சாமானிய மக்கள் சமூக ஊடகங்களை எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து நாம் எந்த அளவுக்குக் குறைவாக அறிந்திருக்கிறோம் என்பதையும் ஆய்வு உணர்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் சொல்வது உண்மை என்பதை இந்த ஆய்வு முடிவுகளைப் பகிர்ந்துகொள்ள அமைக்கப்பட்டுள்ள இணையதளம் தொடர்பாகவும், அதில் உள்ள இணையப் பயிற்சி வகுப்புகள் மூலமும் உணரலாம். ஆங்கிலம் தவிர தமிழிலும் இவற்றை அணுகும் வசதி இருக்கிறது.

நல்லிணக்க உருவாக்கத்தில் ஊடகங்களின் பங்கு

மக்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை பிரதிபலிக்கின்ற,பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மற்றும் செல்வாக்கு செலுத்துகின்ற சாதனமாக ஊடகங்கள் விளங்குகின்றன.மக்கள் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை அப்படியே உண்மையானது என்று நம்புகிறார்கள். குறித்த பலவீனத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் ஊடகங்கள் தமது நிர்வாகத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தம்மைதாமே தயார்படுத்துகின்றன. உலகம் உலகமயமாக்கல் என்ற சுருங்கி கொண்டதன் காரணமாக ஊடகங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிவிட்டன. இதனால், செய்திகளிற்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. செய்திகளை விற்பனை ஓட்டமாக நினைக்கும் தற்போதைய விற்பனை ஊடகங்கள் செய்திகளிற்கு அங்கலாய்க்கின்றன. தற்போதைய நிலையில் பிரதான ஊடகங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் நிலைமையை சமுக ஊடகங்கள் ஏற்படுத்தியிருந்தாலும்,சமூக ஊடகங்களினை எப்படி முற்போக்கான சிந்தனையை விதைப்பதாக பயன்படுத்தி வெற்றியடையலாம் என்று சிந்திக்க வேண்டும். மாறாக, பிற்போக்கான அவமானப்படுத்தல், காழ்ப்புணர்ச்சி வெளிப்பாடு, பாராட்டமனமின்மை,எதிர்மறையான சிந்தனை, புத்திசாலிகள் புறக்கணிக்கபடுதல்,தவறான வழிநடத்தல் மற்றும் போலியான உறவு களின் கூட்டு போன்ற முன்னேற்றத்திற்கு சாதகமற்ற விடயதானங்களே பரப்புரை செய்யப்படுகிறது.இவற்றின் எழுச்சி கீழத்தேய நாடுகளே பாதிப்பை எதிர்கொள்கின்றன.இலவசம் என்ற போர்வையில் விலைபொருளாகிக்கொன்டுள்ளன.குறிப்பாக, அரசியல், பண்பாடு மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் இவற்றின் பங்கு கணிசமானது.இதற்கு அண்மைய ஐல்லிகட்டு வெற்றியை குறிப்பிடலாம்.    எமது நாட்டின் சமூக ஊடக பாவனை கவனயீனமாகவேவுள்ளது.அத்துடன் இனவெறி மற்றும் இனவாதத்திற்கு களம் ஏற்படுத்தி கொடுப்பதாக காணப்படுகிறது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் என தன்னைத் தானே கூறிக்கொள்ளும் அரசாங்கம் நல்லிணக்கம்,சகவாழ்வு என்ற சொல்லினை பயன்படுத்தி சர்வதேசத்திடமிருந்து  தப்பித்தாலும், சமூக ஊடகங்களில் இருந்து தப்பிக்க முடியாது.

SHARE