விமான எரி­பொருள் விலை; சர்­வ­தேச போக்­கு­வ­ரத்து சங்கம் எச்­ச­ரிக்கை

33

விமா­னங்­க­ளுக்­கான எரி­பொருள் விலை­யிடல்  தொடர்பில் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தின் வெளிப்­ப­டை­யற்ற  தன்மை குறித்து  கண்­டனம் தெரி­வித்­துள்ள சர்­வ­தேச  விமான போக்­கு­வ­ரத்து சங்கம்,   வெளிப்­ப­டை ­தன்­மை­யுள்ள விலை சூத்­தி­ரத்தை முன்­னெ­டுக்க அழைப்பு விடுத்­துள்­ள­துடன் மீள எரி­பொ­ருளை ஏற்­று­வது தொடர்­பி­லான  செல­வின அதி­க­ரிப்­பா­னது  விமான தொழிற்­று­றையை திணறச் செய்யும் ஒன்­றா­க­வுள்­ள­தாக  குறிப்­பிட்­டுள்­ளது.

உலக  விமா­ன­ சே­வைகள் ஒன்­றி­யத்தை சேர்ந்த  குழு­வொன்று இலங்­கைக்கு விஜயம் செய்து  இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தை சேர்ந்த அதி­கா­ரிகள் உள்­ள­டங்­க­லான உத்­தி­யோ­கத்­தர்­களை சந்­தித்து  ஏனைய ஆசிய  விமான நிலை­யங்­க­ளி­லான  விமான எரி­பொருள்  விலையை விடவும்  இங்கு விமான எரி­பொருள் விலை குறிப்­பி­டத்­தக்க அளவில் உயர்­வாக உள்­ளதை  சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

உதா­ர­ணத்­திற்கு  இலங்­கை­யி­லான  விமான எரி­பொருள் விலை­யா­னது சிங்­கப்­பூ­ரி­லுள்­ளதை விடவும் 21  சத­வீதம் அதி­க­மா­கவும்   ஹொங்­கொங்­கி­லுள்­ளதை விடவும் 13  சத­வீதம் அதி­க­மா­கவும் பெங்­க­ளூ­ரி­லுள்­ளதை விடவும் 8  சத­வீதம் அதி­க­மாகவும் உள்­ளது.

பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தின் மாதாந்த  விலைகள்  அரபு வளை­குடா ‘மொபக்’   அமைப்பின் விலை­க­ளுக்கு ஒத்­தி­சை­வாக இருக்­கின்ற அதே­ச­மயம்   எரி­பொருள் விலை­க­ளி­லான  இடை­வெளி முர­ணா­ன­தா­க­வுள்­ளதை அவ­தா­னிக்க முடி­வ­தாக சர்­வ­தேச விமான போக்­கு­வ­ரத்து சங்கம் கூறு­கி­றது.

சில சந்­தர்ப்­பங்­களில் சர்­வ­தேச எரி­பொருள் குறி­காட்­டி­யா­க­வுள்ள  மொபக்கின்  விலை சரி­வ­டையும் காலத்­திலும் இலங்கை பெற்­றோ­லிய  கூட்­டுத்­தா­பனம் தனது விலை­களை தொடர்ந்து பேணி வந்­துள்­ள­தா­கவும்    ஏக விநி­யோ­கஸ்தர் என்ற வகையில் இலங்கை பெற்­றோ­லிய  கூட்­டுத்­தா­பனம்  விலை­க­ளி­லான வெளிப்­படை தன்­மையை பேணாமல் தான் தெரி­வு­ செய்த விலை­களை  நிர்ணயிக்கக் கூடிய நிலை காணப்படுவதாகவும்  அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அதிகரித்த விலையானது இலங்கையின் விமான நிலையத்தையும்  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையும்  பாதிப்பதாகவுள்ளது என அந்த சங்கம் எச்சரித்துள்ளது.

SHARE