ஆணொருவருடன் இணைந்து வவுனியா பெண் செய்து வந்த மோசமான காரியம்

வவுனியாவில் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இணைந்து நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உக்கிளாங்குளம் பகுதியில் வைத்து குறித்த பெண்ணும், அவரது உதவியாளரான ஆணும் மோட்டார்சைக்கிளில் ஹெரோயினை விநியோகம் செய்வதற்காக சென்றபோதே 430 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா, தோணிக்கல் பகுதியை சேர்ந்த றீற்றம்மா விஜேயசேகரம் (43 வயது) மற்றும் மூன்றுமுறிப்பு பகுதியை சேர்ந்த லிங்கராசா கிருஷாந்தன் (32 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

About Thinappuyal News