இந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

92
இந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ7 டுயோ ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகமான கேலக்ஸி ஜெ7 டுயோ விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இதன் விலை குறைக்கப்பட்டு ரூ.13,990-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், கேலக்ஸி ஜெ7 டுயோ விலை மீண்டும் குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஜெ7 டுயோ புதிய விலை அமேசான் இந்தியா மற்றும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர்களில் மாற்றப்பட்டு விட்டது. எனினும், ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை ரூ.13,990 என்றே காட்சியளிக்கிறது.
புதிய விலை குறைப்பு மூலம் கேலக்ஸி ஜெ7 டுயோ 4ஜிபி ரேம் கொண்ட அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மற்றும் ஒப்போ ரியல்மி 1 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. கேலக்ஸி ஜெ7 டுயோ புதிய விலை அமேசான் தளத்தில் மாற்றப்பட்டு விட்ட நிலையில், பயனர்கள் அமேசான் ஃப்ரீம் சேல் விற்பனையை பயன்படுத்தி, ஸ்மார்ட்போனுக்கு கூடுதல் சலுகை அல்லது தள்ளுபடி பெற முடியும்.
 

 
சாம்சங் கேலக்ஸி ஜெ7 டியோ சிறப்பம்சங்கள்:
– 5.5 இன்ச் 1280×720 பிக்சல் ஹெச்.டி. சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7 சீரிஸ் பிராசஸர்
– 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமராஸ எல்இடி ஃபிளாஷ், f/1.9
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஹெச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஜெ7 டியோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
SHARE