விமானம் விழுந்து நொருங்கியதில் 8 பேர் பலி : உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்

இந்தோனேஷியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 12 வயதுடைய சிறுவனொருவன் உயிருடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்தோனேசியாவின் பபுவா மாகாணம் தனாவில் இருந்து நேற்று மாலை ஒக்சில் பகுதிக்கு சென்ற சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு விழுந்து நொருங்கியுள்ளது.

குறித்த விமானத்தில் 9 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் ஒக்சில் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.

இதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள், காணாமல்போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் விமானம் பெகுனுங்கன் பிண்டாங் மாவட்டத்தின் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியமை தெரியவந்தது.

இதனையடுத்து மீட்புக்குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 9 பேரில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதில் பயணம் செய்த 12 வயது சிறுவன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான் .

குறித்த விமான வித்திற்கான காரணம் கண்டறியப்படாத போதிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

About Thinappuyal News