வெவ்வேறு பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி

30

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க கந்தகெட்டிய பகுதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பஸ் ஒன்றுடன் மோதியதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் நெல்லியடி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று எதிரே வந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இளவாலை மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 40, 41 வயதுடைய மோட்டார் சைக்கிளின் சாரதிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE