மகிழம்பூவும் அறுகம் புல்லும்’ நாவல் வெளியீட்டு விழா

37

 

மகிழம்பூவும் அறுகம் புல்லும்’ நாவல் வெளியீட்டு விழா

லண்டன் வாழ் படைப்பாளியான தீபதிலகை எழுதிய ‘மகிழம்பூவும் அறுகம் புல்லும்’ நாவலின் வெளியீட்டு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இந்த விழா வவுனியாவிலுள்ள சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீட பீடாதிபதி தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் தமிழ்மணி அகளங்கன் நூலினை வெளியிட்டுவைத்தார்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், கவிஞர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

SHARE