வடக்கில் மஸ்தான் மற்றும் மு.கா செல்வாக்கு! ரிசத்திடம் தெரிவித்தார் பிரதமர் !!

48

 

வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் மஸ்தான் அணியினருக்கே அதிக செல்வாக்கு உள்ளதாக புலனாய்வுத் துறையினர் அரசுக்கு அண்மையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அமைச்சர் ஹக்கீம் மற்றும் மஸ்தான்
போன்றோரை – வடக்கு முஸ்லீம் மக்கள் அதிகளவில் நேசிக்க ஆரம்பித்துள்ளனர். சமூகத்தை முன்னிலைப்படுத்திய அவர்களது அரசியல் செயற்பாடே இதற்குக் காரணம் என்றும் அந்த அறிக்கையில் புலனாய்வுத் துறையினர் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இது தொடர்பில் அதிக அவதானம் செலுத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – தனது கட்சி முக்கிய பிரமுகர்களுக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

அத்துடன், மகா தலைவர் றிசாத்தை அவசரமாக அலரிமாளிகைக்கு அழைத்த பிரதமர் , குறித்த புலனாய்வு அறிக்கை தொடர்பில் எடுத்துரைத்து விரிவாக கலந்துரையாடியுமுள்ளார்,

“வடக்கில் ஹக்கீம், மஸ்தான் பலம் ஓங்குகிறது.உங்கள் கட்சியின் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளதேயே இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறதே” என பிரதமர் – ரிசாத்திடம் தெரிவித்துள்ளார்.

மகா தலைவர் றிசாத் – பிரதமரின் உற்ற நண்பர் என்பது யாவரும் அறிந்த உண்மை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மட்டு.மாவட்டத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் , ஐ.தே.க.வின் கிழக்கு பிரமுகர்களை சந்திருந்த வேளை , மேற்படி புலனாய்வு அறிக்கையை மையப்படுத்தி கருத்து வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை ஒட்டியதாகவே அண்மைய தேசிய நிகழ்வுகளில் அமைச்சர் ரவூப் ஹக்கீமை தன்னுடன் அழைத்துச் செல்வதோடு அந்நிகழ்வுகளில் அமைச்சர் ஹக்கீமுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE