பரிதாபமாக உயிரிழந்த மாணவன்! மைத்திரியின் மனிதாபிமானம்

25

களனி பல்கலைக்கழக வளாகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்தாருக்கு ஜனாதிபதி நிதி உதவி வழங்கி வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவருடைய குடும்பத்தாருக்கு ஜனாதிபதி நிதியில் 10 இலட்சம் ரூபாயை ஜனாதிபதி வழங்கி வைத்துள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்விகற்ற கெபத்திகொல்லா பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருந்தார்.

களனி பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி இந்த அசம்பாவிதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE