தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒரேயொரு டி20 போட்டி கொண்ட தொடரை இலங்கை அணி வென்றது.
தென்ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் ஏற்கனவே முடிந்துவிட்டன.
இந்நிலையில் ஒரேயொரு போட்டி கொண்ட டி20 தொடர் நேற்று நடைபெற்றது.
கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
இலங்கை அணியின் அபார பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க அணி 16.4 ஓவரில் 98 ஓட்டங்களில் சுருண்டது
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான தனஞ்ஜெயா டி சில்வா (2), அகிலா தனஞ்ஜெயா (2), சண்டகன் (3) பந்து வீச்சில் அசத்தினார்கள்.
பின்னர் 99 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டானாலும் சண்டிமல் நிலைத்து நின்று அணியை வெற்றி பெறவைத்தார்.
இதனால் இலங்கை 16.4 ஓவரில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.