அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தும் காலம் வந்துள்ளது! கூட்டு எதிர்க்கட்சி

105

நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை, ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த காலம் வந்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இடதுசாரி தலைவரான காலஞ்சென்ற என்.எம்.பெரேராவின் 39ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை ரூபாயின் பெறுமதி நாளுக்கு நாள் குறைந்து வருவதுடன், மக்களின் வாழ்க்கை சுமையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறான நிலையில், தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இங்கு உரையாற்றிய லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன, இலங்கை அரசியல், பொருளாதாரம் என்ற உடலை, புதிய லிபரல் வாதம் என்ற புற்றுநோய் பிடித்துள்ளது எனக் கூறியுள்ளார்.

அமெரிக்கா, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பன இணைந்து எமது நாடுகளை நேரடியாக சூரையாடி வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE