மாற்று அணியை உருவாக்க விக்கி இரகசிய நகர்வு: சம்பந்தன் ஊடாக தடுக்கும் முயற்சியில், ரெலோ, புளொட்..!

133

 

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து பிரிந்து சென்று தனித்து போட்­டி­யிடும் வகையில் கூட்­ட­மைப்­புக்கு சவா­லாக மாற்று அணி ஒன்றை உரு­வாக்கும் முயற்சியில் இர­க­சி­ய­ காய் நகர்த்தல்களில் ஈடுபட்டு வரு­வ­தாக அறிய முடிகிறது.

இந்­நி­லையில் விக்­னேஸ்­வரன் அவ்­வாறு தனி­யாக பிரிந்து செல்ல  இட­ம­ளிக்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளான தமி­ழீழ விடு­தலை இயக்கம் (ரெலோ) தமி­ழீழ மக்கள் விடு­தலைக் கழகம் (புளொட்) ஆகி­யன கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னி­டம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் தெரி­ய­ வ­ரு­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் வட­மா­காண சபைத் தேர்­தலில் போட்­டி­யிட்டு தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்த முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் அதன் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் கொள்­கை­ரீ­தி­யாக கூட்­ட­மைப்­புக்கும் தனக்கும் வேறு­பா­டுகள் இருப்­ப­தாக பகி­ரங்­க­மாக த் தெரி­வித்­தி­ருந்தார் .

அதன் தொடர்ச்­சி­யாக தமிழ் மக்­களின் அடிப்­படைக் கொள்­கை­களை முன்­வைத்து தேர்­தலில் கூட்­ட­மைப்பு வாக்­குக்­கோ­ரி­யதன் அடிப்­ப­டையில் தான் பயணம் செய்­வ­தா­கவும் கூட்­ட­மைப்­பினர்  தெரி­வித்­த­தோடு   தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்­பி­னையும் உரு­வாக்­கினார்.

அதனைத் தொடர்ந்து தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மை­யுடன் முரண்­படும் நிலை­மைக்கும் தள்­ளப்­பட்டார்

இதே­வேளை மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் இவ்­வ­ருட இறு­திக்குள் நடத்­தப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்ள நிலையில் தற்­போது அர­சியல் கட்­சிகள் அது குறித்த விய+ங்களை வகுக்க ஆரம்­பித்­துள்­ளன.

அதன் பிர­காரம் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் அடுத்த தேர்­தலில் தான் போட்­டி­யி­டுவேன் என்­பதை மட்­டுமே அறி­வித்­துள்ள போதும் கூட்­ட­மைப்­பிலா அல்­லது தனித்தா என்­பது குறித்து தெளி­வாக எத­னையும் கூற­மு­டி­யாது.

தொடர்ச்­சி­யாக மௌனம் காத்து வரு­கின்றார். எனினும் அண்­மைய நாட்­களில் தனிக் கட்­சி­யொன்றை ஆரம்­பிப்­பது தொடர்பில் சில நகர்­வு­களை மேற்கொண்டு வரு­வ­தாக தக­வல்கள் கசிந்­துள்­ளன..

புளொட் அமைப்­பினைச் சார்ந்­த­வர்­க­ளி­டத்தில் ஜன­நா­யக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்ற பெயரில் பதிவு செய்­யப்­பட்ட அர­சியல் கட்­சி­யொன்று காணப்­ப­டு­கின்­றது.

ஆரம்­பத்தில் அக்­கட்­சியை பயன்­ப­டுத்­து­வது தொடர்பில் விக்­னேஸ்­வரன் கரி­சனை கொண்­டி­ருந்­தாலும் புளொட் அமைப்பு இது­வ­ரையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யாக இருப்­பதால் மேற்­படி அர­சியல் கட்­சியை பயன்­ப­டுத்­து­வது குறித்து தீர்க்­க­மான முடி­வொன்றை விக்னேஸ்­வ­ரனால் எடுக்க முடி­யாத சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான நிலையில் புதிய கட்­சியை ஆரம்­பிப்­பது தொடர்பில் நகர்­வு­களை செய்து வரும் விக்­னேஸ்­வரன் புதிய கட்சி ஆரம்­பித்­தாலும் அதனை உடன­டி­யாக பதிவு செய்து மாகாண சபைத் தேர்தல் களத்­திற்கு தயார் படுத்த முடி­யாத நிலை­மைகள் காணப்­ப­டு­வதால் பதிவு செய்­யப்­பட்ட அர­சியல் கட்­சி­களின் பட்­டி­யலைப்  பெற்­றுக்­ கொண்டு  அக்­கட்­சி­க­ளுக்­கான உரித்­துக்­களை கொண்­டி­ருப்­ப­வர்­களை   அறிந்து அவர்­க­ளி­டத்­தி­லி­ருந்து கட்­சியை பெறு­வ­தற்­கான முனைப்­புக்­களை தனக்கு நெருங்­கிய மாகாண சபை உறுப்­பி­னர்கள் ஊடாக முன்­னெ­டுத்து வரு­வ­தாக அறிய முடி­கி­றது.

அதே­நேரம் கொள்கை ரீதி­யாக ஒரு­மித்து பய­ணிக்கக் கூடிய அர­சியல் கட்­சி­க­ளையும் அழைத்து கூட்­ட­ணி­யாக எதிர்­கா­லத்தில் எவ்­வா­றான நகர்­வுகள் முன்­னெ­டுப்­பது என்­பது குறித்த பேச்­சுக்­களை இர­க­சி­ய­மாக முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அப்­பேச்­சுக்­களில் தீர்க்­க­மான முடி­வுகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­காத போதும் உங்­களின் (விக்­னேஸ்­வரன்) தலை­மையின் கீழான கூட்­ட­ணியில் பங்­கெ­டுப்போம் என்ற உறு­தி­ய­ளிப்பு குறித்த தரப்­பி­னரால் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய ­வ­ரு­கின்­றது.

முன்­ன­தா­கவே கஜேந்­தி­ர­குமார் தலை­மை­யி­லான தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியும், சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியும், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியில் இருந்து வெளி­யே­றிய தரப்­பி­னரும் வடக்கு முதல்வர் விக்­னேஸ்­வரன் தலை­மையில் கூட்­ட­ணி­யொன்று அமைந்தால் அதனை வர­வேற்­ப­தோடு பங்­கெ­டுப்­ப­தற்கு தயா­ரா­கவே இருப்­ப­தா­கவும் அறி­வித்­துள்­ளனர்.

இதே­வேளை இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை.சேனா­தி­ராஜா கூட்­ட­மைப்பின் சார்பில் தன்னை வேட்­பா­ள­ராக அறி­விக்கும் பட்­சத்தில் கள­மி­றங்­கு­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தா­கவும் கடந்த முறை இழைத்த தவறை   இம்­முறை இழைப்­ப­தற்கு தயா­ரில்லை என்றும் அறி­வித்­துள்ள நிலையில், தமிழத் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளா­க­வுள்ள ரெலோ மற்றும் புளொட் ஆகி­யன கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க் கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னி­டத்தில் இவ்­வி­டயம் குறித்த தமது நிலைப்­பா­டு­களைப் பகிர்ந்­துள்­ளன.

குறிப்­பாக புளொட் தலைவர் சித்­தார்த்தன் எம்.பி, மற்றும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி ஆகியோர், விக்­னேஸ்­வரன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யேறி தனி­யாக போட்­டி­யி­டு­வ­தா­னது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மட்­டு­மல்ல தமிழ் மக்­க­ளையும் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தாக அமையும்.

மேலும் மாகாண சபைத் தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்பட்டு புதிய முறையில் தேர்தல் நடைபெற்றால் விக்கினேஸ்வரனின் பிளவால் எந்தவொரு தரப்பினருக்கும் ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளதுடன்,

விக்கினேஸ்வரனுடன் பரஸ்பர பேச்சுக்களை நடத்தி இயலுமானவரையில் அவருடைய பிளவைத் தடுப்பதோடு வலுவான தமிழ்த் தேசிய தரப்பாக தேர்தலுக்கு முகங்கொடுப்பதே சிறந்தது என்று தமது கருத்துக்களை சம்பந்தனிடத்தில் முன்வைத்துள்ளனர்.

இவை அனைத்தையும் சம்பந்தன் செவிமடுத்த போதும் அவர் தரப்பிலிருந்து தீர்க்கமான கருத்துக்கள் எவையும் பிரஸ்தாபிக்கப்படவில்லை என அறிய முடிகின்றது.

SHARE