வெடிகுண்டு மிரட்டல் – 11 விமானங்கள் தரையிறக்கம்- சிலியில் சம்பவம்

17

சிலியின் சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபைக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஒன்பது விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிலி ஆர்ஜென்டீனா பெரு ஆகியநாடுகளின் வான்பரப்புகளில் காணப்பட்ட விமானங்களே உடனடியாக தரையிறக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

11 மிரட்டல்கள் விடுக்கப்பட்டன என தெரிவித்துள்ள அதிகாரிகள் விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனைகள் இடம்பெற்றன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.விமானங்களில் எந்த வெடிபொருட்களும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டல்கள்  எங்கிருந்து வந்தன என்பதை கண்டுபிடிப்பதற்கான  நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமையாக நாங்கள் கைவிடப்பட்ட பயணப்பொதிகளை மீட்பது வழமை ஆனால் இந்த மிரட்டல்கள் வழமைக்கு மாறானவையாக காணப்பட்டன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE