35 கிலோ மரை இறைச்சியுடன் இருவர் கைது – வவுனியா சம்பவம்

21

வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று முற்பகல் பட்டரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 35கிலோ மரை இறைச்சியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா போதை ஒழிப்பு பிரிவினருடன் வவுனியா புலனாய்வுப் பிரிவினருக்குக்கிடைத்த இரகசியத்தகவல் அடிப்படையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி வழிநடத்தலில் எஸ். ஜ. உசாந்த தலைமையில் சென்ற குழுவினர் இன்று முற்பகல் நெளுக்குளம் பகுதியில் வைத்து பட்டாரக வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டபோது ,

பழுதடைந்த உணவுகளுக்குள் மறைத்து பக்கட் ஒன்றில் கிடாச்சூரியிலிருந்து வவுனியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்ட 35கிலோ கிராம் மரை இறைச்சியைக் கைப்பற்றியுள்ளதுடன் 39, 19வயதுடைய இருவர் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மரை இறைச்சியும் பட்டாரக சாரதியும் உதவியாளரும் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

SHARE