ஊடகங்கள் தொடர்பில் ரணிலின் கவலை

62

நல்லாட்சி அரசாங்கம் சுதந்திரமாக மூச்சு விட மூன்று வருடங்கள் கடந்துள்ளதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதற்குக் காரணம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசு பெற்ற பெரும் கடன் சுமை ஆகும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

நல்லாட்சியின் முதல் பணி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகும். இதற்காக வேண்டி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

பல சுதந்திர ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டமை, ஜனாதிபதியின் அதிகாரம் குறைப்பு, காணாமல் போனவர்களின் காரியாலயம், தகவல் அறியும் சட்டம் என்பன குறிப்பிடத்தக்கன.

தற்போது தான் கடந்த அரசாங்கம் பெற்ற கடன் சுமையை குறைத்து வருகின்றோம். தனியார் ஊடகங்கள் இதனைக் கண்டு கொள்வதில்லை. அவற்றுக்கு அரசாங்கத்தின் தவறுகள் மாத்திரமே தென்படுவதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.

SHARE