முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஈரானில் பொருளொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு பணம் கொடுக்காமல் நம்பிக்கைத் துரோகம் செய்திருப்பதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

119

 

 

அரசாங்கத்தின் சேறுபூசும் ஊடக பிரச்சாரம்: ஹக்கீம் ஈரானில் நம்பிக்கைத் துரோகம் செய்தார்
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஈரானில் பொருளொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு பணம் கொடுக்காமல் நம்பிக்கைத் துரோகம் செய்திருப்பதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக அரச ஊடகங்களில் வெளிவந்திருக்கும் மேலதிக தகவல்கள் வருமாறு, ஹக்கீம் அமைச்சராக இருந்த காலத்தில் ஈரானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அவர் ஈரானில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் ஆடம்பரமான தரைவிரிப்பு ஒன்றை கொள்வனவு செய்திருந்தார்.

அதன்போது தரைவிரிப்பின் பெறுமதியில் அரைவாசியை செலுத்திய ரவூப் ஹக்கீம், தான் ஒரு அமைச்சர் என்றும் எஞ்சிய தொகையை பின்னர் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

அவர் ஒரு முஸ்லிம் என்பதால் குறித்த கடை உரிமையாளரும் சம்மதித்து தரை விரிப்பை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளார்.

எனினும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எஞ்சிய தொகையை செலுத்தாது திருட்டுத்தனமாக இலங்கை திரும்பிவிட்டார்.

இது குறித்து அறிந்த கடை உரிமையாளர் தெஹ்ரானிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் ஹக்கீமின் மோசடி குறித்து முறைப்பாடு செய்துள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ரவூப் ஹக்கீம் தனது ஈரான் விஜயத்தின் பின்னரும் நீண்ட நாட்கள் வரை அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

ரவூப் ஹக்கீம் அமைச்சராக அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் காலம் வரை இதுபோன்ற எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெளிநாடொன்றின் ஜனாதிபதிக்கே கூட இன்னொரு நாட்டில் கடனுக்கு கொள்வனவு செய்வது சாத்தியமற்ற விடயம் என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியாத அறிவீனர்களே அரச ஊடகங்களில் இருப்பதும் இந்தச் செய்தி மூலம் வெளிதச்சத்துக்கு வந்துள்ளது.

 

SHARE