ரயில் பாதையில் மண்சரிவு ; ரயில் சேவைகள் தாமதம்

19

பதுளை – கொழும்பு பிரதான ரயில் போக்குவரத்து பாதையில் ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் சிங்கமலை சுரங்கப்பகுதிக்கு அருகாமையில், 109 வது மைல் கட்டைப்பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் தாமதமாகி சென்றன.

அதன்பின் பாதிப்பு ஏற்பட்ட ரயில் பாதையை சீர்செய்யும் பணிகள் ரயில் நிலைய ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டன.

தற்பொழுது ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையகத்திற்கான ரயில் சேவை வழமைக்கு மாறியுள்ளதாக ஹட்டன் ரயில் நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இன்று மலையக பகுதிகளில் பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாகவே இந்த ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

SHARE