(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்)
மலையகத்தில் தொடரும் சீரற்ற கால நிலையினால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்து நிரம்பி வழிகிறது.
18.08 .2018 அதிகாலை முதல் பெய்யும் அடை மழையினால் பல வருடங்களின் பின்னர் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் நிரம்பி வழிவதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காசல்ரீ நீர்த்தேக்கத்தை அண்மித்த கரையோர வாழ்வோரும் காசல்ரீ ஓயா வாழ் மக்களும் அவதானத்துடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மேலும் காசல்ரி நீர் தேக்கத்தில் நீர் வழிந்தோடுவதனால் நோட்டன் விமலசுரேந்திர நீர் தேக்கமும் நிரம்பி வழிவதாக லக்ஷபான மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
