என்ன ஆச்சு விஜயகாந்துக்கு? தள்ளாடிய நிலையில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த காட்சி

37

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், முத்தமிழ் அறிஞருமான கலைஞர் சமீபத்தில் மறைந்தார். அப்போது அமெரிக்காவில் இருந்த விஜயகாந்தால் வரமுடியாத சூழ்நிலையால் வீடியோவில் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வந்த விஜயகாந்த் அதிகாலையிலேயே கலைஞர் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்.

ஆனால், சிகிச்சை பெற்று வருவதால் நடக்கமுடியாமல் மிகவும் தள்ளாடியபடியே வந்தார். கம்பீரமான நடைக்கு சொந்தக்காரரான விஜயகாந்த் இப்படி வந்தது கொஞ்சம் வருத்தம்தான். விரைவில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஞ்சலி செலுத்தும்போதும் குழந்தை போல அழுதார்.

SHARE