இந்த வருடம் மக்கள் அதிகம் பேர் தியேட்டர் வந்து பார்த்த படம் எது தெரியுமா?

34

தமிழ் சினிமாவில் இந்த வருடம் இதுவரை 100க்கும் அதிகமான படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் ஹிட் படங்கள் என்று பார்த்தால் கடந்த சில மாதங்களில் வெளிவந்த படங்கள் தான் அதிகம்.

அந்த வகையில் இந்த வருடம் தியேட்டருக்கு வந்த மக்கள் அதிகம் பேர் பார்த்த படம் எது என்ற ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இதில் கடந்த வாரம் வரை காலா தான் முதலிடத்தில் இருந்தது, ஆனால், தற்போது காலாவை பின்னுக்கு தள்ளி கடைக்குட்டி சிங்கம் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஆம், இந்த வருடம் திரையரங்கும் வந்து அதிகம் பேர் பார்த்த படம் கடைக்குட்டி சிங்கம் தான், இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 55 கோடி வரை வசூல் செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், கார்த்தியில் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம் கடைக்குட்டி சிங்கம் தான். இதற்கு அடுத்தடுத்த இடத்தில் காலா, தானா சேர்ந்த கூட்டம் , இரும்புத்திரை, டிக் டிக் டிக் ஆகிய படங்கள் உள்ளது.

SHARE