எனக்கு எதற்கு கொடி, தளபதி விஜய்யே கூறிய பதில் இதோ

16

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருக்கின்றது.

இந்நிலையில் விஜய் அதிவிரைவில் அரசியலுக்கு வருவதாக உள்ளார், அதனால், தான் தன் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றினார்.

அதற்கென ஒரு கொடியை கூட அறிமுகப்படுத்தினார் என்றும் கூறி வந்தனர், ஆனால், இதற்கு தளபதி விஜய்யே ஒரு பதிலை கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘என் ரசிகர்கள் நான் சொல்லாமலேயே பலருக்கும் பல உதவிகளை செய்து வருகின்றனர், அந்த நல்ல பெயர் எல்லாம் என்னை வந்து அடைகின்றது.

அதனால், அவர்களுக்கு ஓர் அடையாளம் வேண்டும் என்பதற்காக தான் கொடி, மற்றப்படி எந்த நோக்கமும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

SHARE