கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 3 பொலிஸ் அதிகாரிகள் கைது

29

களுத்துறையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பில் பாணந்துறை வலய குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட மூவரும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த மூவரும் களுத்துறை பாலத்திற்கு அருகில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE