13,850 மில்லிகிராம் கேரள கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது

34

தலவாக்கலை பகுதியில் 13,850 மில்லிகிராம் கேரள கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு சுற்றி வளைப்பினை மேற்கொண்ட அதிகாரிகள் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் இரகசியமான முறையில் மறைத்து வைத்திருந்த கஞ்சாவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்ளை இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கலால் திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 

 

 

 

SHARE