கோகோ டீமுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர்ஸ்டார்

34

நயன்தாரா மற்றும் யோகிபாபு நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தை பார்த்த நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சனுக்கு போன் செய்து பாராட்டியதாக நேற்று தெரிவித்திருந்தனர்.

சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன் என ரஜினி நயன்தாராவின் நடிப்பு பற்றி தெரிவித்தாராம். இந்நிலையில் இன்று மொத்த டீமையும் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.

இந்த சந்திப்பு பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர், “என்ன ஒரு எனெர்ஜி.. உங்கள் வாழ்த்துக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

SHARE