கடன் தகராறு ; கர்ப்பிணி மீது கத்திக் குத்து

17

கடன்கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆறு மாதக் கர்ப்பிணி மீது நேற்று கத்திக் குத்து நடத்தப்பட்ட நிலையில் கர்ப்பிணி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

குறித்த சம்பவத்தின்போது வீமன்காமத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சுகந்தினி என்னும் கர்ப்பிணித் தாயாரே இவ்வாறு கத்திக்குத்திற்கு இலக்கான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

குறித்த பெண்மணி அயலில் உள்ள குடும்பத்திற்கு வழங்கிய கடன்   தொடர்பில் அதனை மீளச் செலுத்தக்கோரி நேற்றைய தினம் கோரியபோதே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இச் சர்ச்சை ஒரு கட்டத்தில் வாய் தர்க்கமாக மாறி சச்சரவில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டத்தில் குறித்த கர்ப்பிணித் தாய்மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து வயிற்றுப் பகுதியில் கத்திக் குத்திற்கு இலக்கான தாயார் உடனடியாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளதனையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE