பெண்களே அதிகமாக வெள்ளைப்படுதா? இதுதான் காரணமாம்

36

பெண்களின் பிறப்புறுப்பின் வழியே சளி போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் என்கிறோம்.

வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது.

அதிகமான வெள்ளைபடுதலுக்கான சில முக்கிய காரணங்கள் மற்றும் அதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

வெள்ளைபடுதாலுக்கான முக்கிய காரணங்கள்
 • பால்வினை நோய்களால் பாதிக்கபட்டவருடனான பாதுகாப்பற்ற தொடர்பு கொள்வதால் வெள்ளைப்படுதல் அதிகரிக்கும், அந்த பகுதியில் அரிப்பு மற்றும் எரிச்சலும் ஏற்படும்.
 • அதிகமான வெள்ளைப்படுதல் ஏற்பட முக்கிய காரணம் பெண் உறுப்பின் உட்புறத்தில் புஞ்சை வளர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் ஏற்படும் தொற்றின் காரணமே ஆகும்.
 • ஒவ்வொரு மாதமும் கரு முட்டைகள் அதிகமாக உருவாகும் காலத்தில் அதிகமான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். இந்த காலம் கருவுறுதலுக்கு ஏற்ற காலமாக கருதப்படுகிறது.
 • அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப்படுதல் உண்டாகிறது. மேலும் தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படலாம்.
 • சில பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்துலின்றனர். இதனால் பெண்களுக்கு பெண் உறுப்பில் தொற்று ஏற்பட்டு அதன் காரணமாகவும் வெள்ளைப்படுதல் உண்டாகலாம்.
 • நறுமண மிக்க சோப், ஸ்பிரே, பெண்ணுறுப்பை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவம் போன்றவற்றால் சில பெண்களுக்கு ஒவ்வாமை ஏற்படும். இதனால் ஏற்படும் தொற்றின் காரணமாக அதிக அளவிலான வெள்ளைப்படுதல் ஏற்படும்.
 • சிறுநீர் பாதையில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வெள்ளைப்படுதலில் ஒரு வித துர்நாற்றம் வீசும். சராசரி அளவை விட அதிகமான வெள்ளைப்படுதலும் இருக்கும்.
வெள்ளைபடுதலை நிறுத்த செய்யவேண்டியவை
 • அருகம்புல் இரண்டு கைப்பிடி, கீழாநெல்லி ஒரு கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து எருமைத்தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.
 • வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.
 • இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.
 • நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.
 • புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும்.
 • உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.
தவிர்க்க வேண்டியவை
 • இளநீர், கீரை, தயிர், மோர் இவைகளை அதிகம் சேர்த்தும் மாமிச உணவு வகைகள், கத்தரிக்காய் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.
 • தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். மேலும் கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.
 • பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.
SHARE