சமகாலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை முகங்கொடுத்துள்ளதாக துறைசார் வல்லுநர் தெரிவித்துள்ளனர்.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற தரப்படுத்தலில், இலங்கை முன்னோக்கி செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கு சில பிரதான பிரச்சினைகள் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பொருளாதார ரீதியில் இன்னமும் தன்னிறவு அடையவில்லை. இதனால் நிலையான அந்நிய செலாவணி பெற்றுக் கொள்வதற்கும், பொருளாதார நிலைமையை ஏற்படுத்தி கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே இலங்கை இந்த தரப்படுத்தலில் முன்னிலை பெற முடியவில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ ஆய்வுகள் மற்றும் வர்த்தக சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனக்க குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டில் புதிய தொழில் உருவாக்க வேண்டியது கட்டாயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 15 வருடங்களில் இலங்கையின் ஏற்றுமதி பலவீனமாக உள்ளது. முதல் படியாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.