உடலில் குத்தப்பட்ட 1616 ஊசிகள்…3 முறை கருச்சிதைவு: துயரத்தை புகைப்படமாக விவரித்த லண்டன் தம்பதி

25

லண்டனை சேர்ந்த ஒரு குழந்தையை சுற்றிலும் இதய வடிவிலான ஊசிகள் இருப்பதை போன்ற புகைப்படம் சமீப காலமாகவே இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

ஒரு தம்பதியினருக்கு குழந்தை பிறப்பதில் பிரச்னை ஏதேனும் ஏற்பட்டால், கருமுட்டையையும் உயிரணுவையும் டெஸ்ட் டியூபில் இணைத்து, பின் சில நாட்கள் கழித்து அதனை பெண்ணின் கருப்பையில் ஊசியின் மூலம் ஏற்றுவார்கள். இந்த முறைக்கு ஐ.வி.எஃப் என்ற பெயர் உண்டு.

ஒரு முறை இந்த ஊசியினை பயன்படுத்துவதற்கு 2 அல்லது 3 லட்சம் வரை செலவாகும். ஆனால் முதல் முறையிலே இந்த முயற்சி வெற்றியடையும் என்பது பெருத்த சந்தேகமே.

இந்த முறையினை ஒரு பெண்ணுக்கு 4 தடவை மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்கு மேல் சென்றால், மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உண்டு.

ஆனால் இவற்றை எல்லாம் லண்டனை சேர்ந்த ஒரு தம்பதியினர் தவிடுபிடியாக்கியுள்ளனர்.

லண்டனை சேர்ந்த Patricia (30) – Kimberly (37) தம்பதியினருக்கு கடந்த 3-ம் தேதியன்று அழகிய பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்ததும், அதனை சுற்றிலும் 1,616 ஊசிகளை இதய வடிவில் அடுக்கி புகைப்படம் ஒன்றினை எடுத்து கடந்த 10-ம் தேதியன்று இணையத்தில் பதிவிட்டனர். பதிவிட்ட சில மணி நேரங்களில் பலராலும் பகிரப்பட்டது.

அப்படி என்ன அந்த குழந்தை பிறந்ததில் சிறப்பு என கேட்கையில், திருமணத்திற்கு பின்னர் நீண்ட நாட்களாக குழந்தையின்றி தவித்த தம்பதி, ஐ.வி.எஃப் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்துள்ளனர். அதன் படி மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்ந்து தோல்வியிலேயே முடிந்துள்ளது.

ஆபத்தான கட்டத்தையும் தாண்டி, Patricia தன்னுடைய முயற்சியை தொடர்ந்துள்ளார். இதற்காக கடந்த 4 ஆண்டுகளில் 1616 ஊசிகள் Patricia-வின் உடலில் குத்தப்பட்டுள்ளன 7 முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சியில், 3 கருச்சிதைவுகள் நிகழ்ந்துள்ளதாக அந்த தம்பதியினர் விளக்கியுள்ளனர்.

SHARE