இன்று தொடக்கம் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்-வானிலை அவதான நிலையம் தெரிவிப்பு.

24

இன்று தொடக்கம் நாட்டின் பல பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு , வடமத்திய , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

அதேபோல் , தென் மாகாணத்தின் சில பிரதேசங்களில் மணிக்கு 40 தொக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

SHARE