நியூசிலாந்தில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பல இளைஞர்களை ஏமாற்றிய பெண் ஒருவர் கைது.

15

நியூசிலாந்தில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பல இளைஞர்களை ஏமாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளைப் பகுதியில் வாழும் 70 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டின் பல பிரதேசங்களில் மதத் தலைவர்களுடன் நுட்பமான முறையில் நட்புறவு ஏற்படுத்தி தான் நியூசிலாந்து குடியுரிமை பெற்றவர் என சந்தேகநபர் கூறியுள்ளார்.

மத வழிபாட்டு தலங்களுக்கு வரும் மக்களுக்கு நியூசிலாந்தில் தொழில் பெற்றுக் கொடுக்க முடியும் என கூறி தனது மோசடியை ஆரம்பித்துள்ளார்.

அண்மையில் நுவரெலியா, பூண்டுலோயா பிரதேசத்தில் உள்ள விகாரையின் தேரர் ஊடாக 16 இளைஞர்களிடம் 56 லட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல நீதிமன்றங்களில் வழக்கு இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் விசேட சுற்றி வளைப்பின் போது சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE