இந்த ஒரு கீரையை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

26

பசலைக் கீரையை சாப்பிடுவதால் உண்டாகும் ஏராளமான நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

பசலைக் கீரையில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள் மற்றும் பைபிளேவனாய்டுகள் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, ரத்தசோகைக்கு பசலைக் கீரை சிறந்த தீர்வாகும்.

பசலைக் கீரையினால் கிடைக்கும் இதர நன்மைகள்
  • பசலைக் கீரையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் எளிதில் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  • இந்த கீரையில் புரதங்களை பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளதால், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவுகின்றது.

  • பசலைக் கீரை மலத்தை நன்றாக இளக செய்து, எரிச்சலை தணிக்கிறது. மேலும் திசுக்களின் அளவை இது குறைக்கிறது.

  • பசலைக் கீரையில் சோடியம், கால்சியம், போலாசின் ஆகியவை உள்ளன. எனினும் கொழுப்பு சத்து இதில் இல்லை.
  • நீரிழிவு, ரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் பசலைக் கீரைக்கு உண்டு.
  • பசலைக் கீரையின் சாறு சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது. அத்துடன் சிறுநீரக கோளாறுகளையும் இந்த கீரை அகற்றுகிறது. இதன் சாற்றை கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகும்.

  • பசலைக் கீரையின் இலைகளை கசாயம் வைத்து குடிப்பதன் மூலம் காய்ச்சல்கள், கல்லடைப்பு, சுவாசப்பைகளிலும், குடல்களிலும் உள்ள வீக்கங்களை குணப்படுத்தும். மேலும் சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இயங்கும் சுவாசம் மற்றும் நோய்களின் போது உண்டாகும் எரிச்சலையும் சரிசெய்யும்.
SHARE