உதடுகள் கருமையா? இவற்றில் ஒன்றை ட்ரை பண்ணுங்க

25

முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.

தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும்.

அதற்கு கடைகளில் விற்கும் கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்தமால் நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இயற்கை முறையில் உதடுகளை நிரந்தரமாக அழகுப்படுத்த முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் தேய்த்து வர உதடுகள் கருமை நீங்கி மென்மையாகும்.
  • எலுமிச்சை சாறில் சிறிதளவு மஞ்சள் கலந்து உதட்டில் தடவி, பத்து நிமிடம் ஊற வைத்து கழுவவும். தினமும் இதைச் செய்து வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
  • தினமும் இரவு சிறிதளவு ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றிலும் தடவி வர சில நாட்களில் உதடுகளைச் சுற்றியுள்ள கருமை நிறம் மறைந்து பளிச்சென்று மாறிவிடும்.
  • தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும் சக்தி கொண்டது. தினமும் தயிரை உதட்டில் தடவி வாருங்கள். தயிருக்கு பதில் யோகர்ட்டும் தடவலாம்.
  • உப்பு கலக்காத வெண்ணெய் அரை ஸ்பூன் எடுத்து, அதில் ஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாறு கலந்து உதட்டில் தடவவும். இப்படிச் செய்தால் உதடு வெடிப்பு சரியாகி மென்மையாகும்.
  • பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு அரைத்து, உதட்டில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாக இருக்கும்.
  • மாதுளை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமையை போக்கலாம்.
  • எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் சாற்றை மட்டும் உதட்டில் தடவி, 4-5 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் லிப்- பாம் போட்டுக் கொண்டால், உதட்டில் இருக்கும் கருமை நீங்கும்.
  • உதட்டில் உள்ள கருமையை போக்குவதற்கு, தயிரை உதட்டில் தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் உதட்டில் உள்ள கருமை நீங்கி, மென்மையாக இருக்கும்.
  • கிளிசரின் லிப்-பாம் போன்றது. எனவே கெமிக்கல் கலந்த லிப்-பாமை பயன்படுத்துவதற்கு பதிலாக, கிளிசரினைத் தடவி வந்தால், உதட்டை நீண்ட நேரம் ஈரப்பசையுடன் வைத்து, கருமையை போக்கும்.
SHARE