அறிவு இருக்கா? உள்ளாடையுடன் நடமாடிய இளம்பெண்ணுக்கு எதிராக குவியும் கண்டனங்கள்

21

மலேசியாவின் Sabah நகர வீதியில் உள்ளாடையுடன் நடமாடிய பெண்ணுக்கு எதிராக பொதுமக்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மலேசியாவின் Sabah நகரத்தில் Kota Kinabalu பகுதியில் அமைந்திருக்கும் ஆசியா சிட்டி ஷாப்பிங் வளாகத்திற்கு வெளியில் இளம்பெண் ஒருவர், ஆணுடன் ஆபாசமான ஆடையுடன் வளம் வந்திருக்கிறார்.

இதனை அங்கிருந்த நபர் ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதற்கு எதிராக மலேசிய மக்கள் பலரும் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதில் ஒருவர், பெரிய பெண்ணாக இருந்து என்ன புண்ணியம். பொது வெளியில் எப்படி ஆடை உடுத்துவது என்பது பற்றிய அறிவு கூட இல்லை என பதிவிட்டுள்ளார்.

அதேசமயம் மற்றொருவர், கடந்த சில நாட்களாகவே நகரத்தில் வெயிலின் தாக்கம் 34 முதல் 35 டிகிரி வரை இருந்து வருகிறது. ஒருவேளை அதனை பொறுக்க முடியாமல் கூட அவர் இவ்வாறு ஆடை அணிந்திருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் புகைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுற்றுலா துறை அமைச்சர் Christina Liew, மலேசியாவின் அழகை காண வரும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். ஆனால் எங்களுடைய கலாச்சாரத்தை சீர்குலைக்கும் விதமாக ஆடை அணிந்தால் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறியுள்ளார்.

மேலும் சம்மந்தப்பட்ட பெண் குறித்து யாரும் எந்த வித புகாரும் இதுவரை அளிக்காததால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE