கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

23

கந்தகெட்டிய, மொரஹேல, மீகொல்ல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள சடலம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 ஆம் திகதி முதல் காணாமற்போன 31 வயதுடைய கெட்டவத்த, மீகஹாகியூல பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் இது ஒரு கொலையாக இருக்கக்கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரேத பரிசோதனைகள் இன்று (28) நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கந்தகெட்டிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE