வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அற்புதம் ஏராளம்

32

வெந்தயம் உணவில் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. மேலும் வெந்தயம் உடல் சூட்டை தணிப்பதோடு, ஏராளமான மருத்துவ நன்மைகளை தன்னுள் அடங்கியுள்ளது.

வெந்தயத்தில் விட்டமின் ஏ, சி, பி6, போலேட்ஸ், நியாசின், பைரிடாக்சின், ரிபோப்லேவின்,தயாமின், சோடியம், பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து,இரும்புச்சத்து,பாஸ்பரஸ் போன்ற அனைத்து சத்துக்களும் வெந்தயத்தில் அடங்கியுள்ளன.

வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி அதைக் கொண்டு டீ தயாரித்தும் குடிக்கலாம். இத்தகைய வெந்தய டீ எப்படி செய்வது மற்றும் அதனால் என்ன பயன்கள் என்று பார்க்கலாம்.

வெந்தயம் டீ
தேவையானவை
 • வெந்தயம் – தேவையான அளவு
 • தேன் – ஒரு டீஸ்பூன்
 • எலுமிச்சை சாறு – சிறிதளவு
 • தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
 • முதலில் தேவையான அளவு வெந்தயம், தண்ணீர் எடுத்துக்கொண்டு மூடிவைத்து நன்கு கொதிக்கவைக்கவும்.
 • பின்பு 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும். சிறிது ஆறியதும் அதில் உண்மையான தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு கலந்தால் வெந்தயம் டீ தயராகிவிடும்.
வெந்தய டீயின் நன்மைகள்
 • மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
 • பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.
 • தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.
 • வெந்தயத்தில் அதிகமாக உள்ள பொட்டாசியம் இரத்தத்தில் உள்ள உப்பை குறைப்பதால் இரத்த அழுத்தம் குறைந்து இதயம் பாதிப்படைவது குறைகிறது.
 • மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.
 • வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
 • உடல் சூட்டால் உண்டாகும் பித்தம், அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கும் இந்த வெந்தய டீ ஒரு நிரந்தர தீர்வாகும்.
SHARE