மன்னாரில் ‘முதியோர்களுக்கான அரசாங்க சேவை’ தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித்தட்டம்

22
-மன்னார் நகர் நிருபர்-
 
முதியோர்களுக்கான அரசாங்க சேவை தொடர்பில் கிராம அலுவலகர்கள் மற்றும் வெளிக்கள சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஆகியோருக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(28) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் முதியோர்களுக்கான தேசிய செயலகம் மற்றும் சமூக நலன்புரி அமைச்சு ஆகியவற்றின் அனுசரனையுடன் குறித்த விழிர்ப்புணர்வு நிகழ்ச்சித்தட்டம் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம் பெற்ற குறித்த விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தில் கிராம அலுவலகர்கள்,வெளிக்கள சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் உற்பட முதியோர் சங்க பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது முதியோர்களுக்கான அரச சேவை தொடர்பில் விழிர்ப்புணர்வு கருத்துக்களை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து தொற்றா நோய் தொடர்பிலான விழிர்ப்புணர்வு கருத்துக்களை வைத்திய கலாநிதி டெனி  வழங்கினார்.
SHARE