“மலையக ஆசிரிய உதவியாளர்களை நிரந்தரமாக்கவும்”

22

மலையக ஆசிரிய உதவியாளர்களை உடனடியாக நிரந்தரமாக்கக்கோரி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளதது. மலையகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு  3000 ற்கு மேற்பட்ட ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு பின் கட்டம் கட்டமாக இந்த ஆண்டுவரை பல நியமனங்கள் வழங்கி, ஆரம்பத்தில் 6000 ரூபா சம்பளமாக இவர்களுக்கு வழங்கப்பட்டது. பின் பல போராட்டங்களுக்கு பின்னர் அத் தொகை 10000 ரூபா உயர்த்தப்பட்டது.

மேலும் ஆசிரியர் கலாசாலைகளில் இரண்டு வருட பயிற்சியை பூர்த்தி செய்து பாடசாலைகளுக்கு திரும்பியுள்ளவர்கள் ஏனைய ஆசிரியர்கள் போன்றே மேலதிகமாக கற்பித்தலில் ஈடுபடுகின்ற நிலையில் இவர்களை தொடர்ந்தும் ஆசிரிய உதவியாளர்களாக சுட்டிக்காட்டுவது மிகப்பெரிய அநீதியாகும்.

எனவே இவர்களை உடனடியாக இலங்கை ஆசிரியர் சேவை தரம்  3 -ஐ ற்கு உள்வாங்குமாறும், நியமனம் பெற்ற திகதியிலிருந்து 3 உள்வாங்கி அவர்களுக்கான நிலுவைச் சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்றும் இல்லாவிடின் பாரிய தொழிற்சங்க போராட்டத்திற்கு செல்ல வேண்டி வரும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE