அணுவாயுதங்கள‍ை முற்றாக அழித்தால் மாத்திரமே அமெரிக்கா வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் – வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோ.

37

வட கொரிய தனது அணுவாயுதங்கள‍ை முற்றாக அழித்தால் மாத்திரமே அமெரிக்கா வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னும் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது கிம்யொங் உன், அணுவாயுத பரிசோதனைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதாகவும் அதற்கிணங்க அணுவாயுத பரிசோதனை தளங்கள் விரைவில் அழிக்கப்படும் எனவும் ட்ரம்பிடம் வாக்குறுதியளித்திருந்தானர்.

இதற்கிணங்க ட்ரம்பும் வடகொரிய மீதான பொருளாதார தடைகளை நீக்குவதற்கு இணக்கம் தெரிவித்தார்.

இந் நிலையில் வடகொரிய தற்போது மீண்டும் அணுவாயுத பரிசோதனைகளை இரசியமாக மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையினால் அமெரிக்கா, அணுவாயுத பரிசோதனைகளை முற்றாக ஒழித்தால் மாத்திரமே வடகொரிய மீதான பொருளாதார தடைகளை நீக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிப்போம் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோ குறிப்பிடுகையில், ட்ரம்புடனான சந்திப்பில் கிம்யொங் உன் அளித்த வாக்குறுதியின்படி அணுவாயுதங்கள் அழிக்கப்பட வேண்டும். அப்படி அழிக்கப்பட்டால் மாத்திரமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் என தெரிவித்துள்ளார்.

SHARE