இளைஞர்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சாட்டில் கைதான நேவி சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு.

31

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சாட்டில் கைதான நேவி சம்பத் என்றழைக்கப்படும் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சிக்கு செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நேவி சம்பத்தினை இன்று கொழும்பு நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் எதிர் வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

SHARE